/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை சிறை கைதிகள் இனி வீடியோகாலில் பேசலாம்: கட்டண அடிப்படையில் அறிமுகம்

ADDED : டிச 05, 2024 07:15 AM

மதுரை: மதுரை மத்திய சிறை கைதிகள் இனி குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், வக்கீல்களுடன் கட்டணம் செலுத்தி வீடியேகாலில் பேசும் வசதி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது கைதிகள் ஆறு நாட்களுக்கு ஒருமுறை 9 நிமிடங்கள் போனில் பேச அனுமதிக்கப்படுகின்றனர். அடுத்தக்கட்ட முயற்சியாக வீடியோகாலில் பேசும் வசதி அறிமுகப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் மதுரை, கோவை உள்ளிட்ட மத்திய சிறைகளில் நடந்து வந்தன. மதுரை சிறையில் கேண்டீன் பின்புறம் இதற்கான பூத்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒரே நேரத்தில் 10 கைதிகள் தனித்தனியே பேச முடியும். அனைத்தும் பதிவு செய்யப்படும். சிறை காவலர்களும் கண்காணிப்பர். காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கைதிகள் இவ்வசதியை பயன்படுத்திக்கொள்ளலாம். ஒரு கைதி மூன்று நாட்களுக்கு ஒருமுறை 12 நிமிடம் வீடியோகாலில் பேச அனுமதிக்கப்படுவர். இதன்மூலம் மாதம் 10 நாட்கள் பேச முடியும்.
ஆடியோ காலில் மட்டும் பேச ரூ.2.24, வீடியோகாலில் பேச ரூ.5.19 கட்டணமாக செலுத்த வேண்டும். முன்கூட்டியே கைதிகளின் கணக்கில் உறவினர்கள் மூலம் பணம் வரவு வைக்கப்பட்டு, வீடியோகாலில் பேசிய நேரத்திற்கு ஏற்ப கட்டணம் கழிக்கப்படும்.