/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை முன்னிலை
/
சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை முன்னிலை
ADDED : செப் 18, 2024 09:31 PM
மதுரை:இந்திய அளவில் சரக்கு ரயில்களை வேகமாக இயக்குவதில் மதுரை ரயில்வே கோட்டம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது. 2023ல் சரக்கு ரயில்களை மணிக்கு 38.62 கி.மீ. வேகத்தில் இயக்கி இந்திய அளவில் முதன்மை கோட்டமாக இருந்து வந்தது.
இந்த ஆண்டும் செப்டம்பர் 15 வரை சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 40.45 கி.மீ., ஆக உயர்ந்து தொடர்ந்து இந்திய அளவில் முன்னிலை வகிக்கிறது.
சரக்கு ரயில்களின் சராசரி வேகத்தில், பயணியர் ரயில்களுக்கு வழி விடுவதற்காக நிறுத்தி வைக்கும் காலம் போன்றவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதேபோல பயணிகள் ரயில்களையும் இந்த ஆண்டில் 168 நாட்களில் 108 நாட்கள் 100 சதவீதம் காலம் தவறாமல் இயக்கியுள்ளது. இது கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் கோட்ட மேலாளர் சரத் ஸ்ரீவத்ஸவா, கூடுதல் கோட்ட மேலாளர் எல்.என். ராவ், வேக சக்தி முதன்மை திட்ட மேலாளர் ஹரிகுமார், கோட்ட ரயில் போக்குவரத்து மேலாளர் பிரசன்னா, முதன்மை கோட்ட பொறியாளர் கார்த்திக் கலந்து கொண்டனர்.

