sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 12, 2026 ,மாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை 'மாஸ்டர் பிளான்' கருத்துக் கேட்பு கூட்டம்

/

மதுரை 'மாஸ்டர் பிளான்' கருத்துக் கேட்பு கூட்டம்

மதுரை 'மாஸ்டர் பிளான்' கருத்துக் கேட்பு கூட்டம்

மதுரை 'மாஸ்டர் பிளான்' கருத்துக் கேட்பு கூட்டம்


ADDED : பிப் 21, 2024 06:18 AM

Google News

ADDED : பிப் 21, 2024 06:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: தமிழகத்தில் 1971 ல் மாஸ்டர் பிளான் திட்டம் உருவாக்கப்பட்டது. தற்போது மதுரை நகர் விரிவாக்கத்திற்கான 'மாஸ்டர் பிளான்' வரைவு திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் 3 நகராட்சிகள், 4 டவுன் பஞ்சாயத்துக்கள், 316 ஊராட்சிகள் ஒருங்கிணைக்கப்பட்டு 147.97 சதுர கி.மீ., ஆக நகர் எல்லை விரிவடைய உள்ளது.

மதுரை நகரில் 1994 ல் பழைய 72 வார்டுகளுக்கு மாஸ்டர் பிளான் திட்டம் செயல்படுத்தப்பட்டது. பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இது மேம்படுத்தப்பட வேண்டும். பல ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தாததால், தொழில் உட்பட எந்த வளர்ச்சியும் மேம்பாடு பெறவில்லை.

குடியிருப்புகள் வர்த்தக பகுதிகளாக மாறி போக்குவரத்து நெரிசல், சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு தீர்வாக புதிய மாஸ்டர் பிளானுக்கு அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த நகர் ஊரமைப்பு சட்டம் 1971 ஐ மறுசீரமைப்பது குறித்து பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நேற்று மடீட்சியாவில் நடந்தது. கலெக்டர் சங்கீதா துவக்கி வைத்து, நகர் ஊரமைப்பு சட்டம், முக்கியத்துவம் குறித்து பேசினார்.

உதவி இயக்குனர் மஞ்சு, கண்காணிப்பாளர் முருகன், மேற்பார்வையாளர் ரங்கதுரை, கட்டட கலை திட்ட உதவியாளர் வாசில் அகமது பங்கேற்றனர்.

ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கம், 'கிரெடாய்' அமைப்பு, பிளாட் புரமோட்டர்ஸ் அசோசியேஷன், பில்டர்ஸ் அசோசியேஷன், பொறியாளர்கள், நகர் ஊரமைப்பு அதிகாரிகள் கலந்துரையாடினர். குஜராத் மாநிலம் அகமதாபாத் சி.இ.பி.டி., பல்கலை வல்லுனர்கள் விளக்கமளித்தனர்.






      Dinamalar
      Follow us