/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி
/
அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி
அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி
அரசு ஆஸ்பத்திரியில் "வென்னீர்' தினமலர் செய்தி எதிரொலி
ADDED : ஆக 11, 2011 03:43 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலக பஸ்ஸ்டாண்ட்டில் அரசு ஆஸ்பத்திரியின் விரிவாக்க கட்டடம் சமீபத்தில் துவக்கப்பட்டது.
இப்பிரிவை மேம்படுத்துவது குறித்து தினமலர் இதழில் செய்தி வெளியானது. ஆஸ்பத்திரி வளாகத்தில் நோயாளிகளுக்கு, 'சோலார்' மின்சக்தி மூலம் வென்னீர் வசதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதற்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. தீவிர சிகிச்சை பிரிவின் அருகில் மின்சார வசதியில் வென்னீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இப்பிரிவின் பொறுப்பு அதிகாரி டாக்டர் காந்திமதிநாதன் இதற்கு முயற்சி எடுத்தார். இப்பிரிவுக்கு கிரானைட் சங்கத்திடமிருந்து கட்டில்கள், அழகர்கோயில் அபிலாஷ் கெமிக்கல் நிறுவனத்திலிருந்து பர்னிச்சர்களும் பெறப்பட்டன.