/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
அமைச்சர்கள் பெயரை சொல்லி ரூ.4 கோடி சுருட்டியவர் கைது
/
அமைச்சர்கள் பெயரை சொல்லி ரூ.4 கோடி சுருட்டியவர் கைது
அமைச்சர்கள் பெயரை சொல்லி ரூ.4 கோடி சுருட்டியவர் கைது
அமைச்சர்கள் பெயரை சொல்லி ரூ.4 கோடி சுருட்டியவர் கைது
ADDED : ஆக 22, 2011 02:33 AM
மதுரை, : அ.தி.மு.க., அமைச்சர்களை தெரியும் என்றுக்கூறி, ஆசிரியர் வேலை
வாங்கித் தருவதாக ரூ.4 கோடி வரை மோசடி செய்த நபரை கர்நாடகாவில் மதுரை
சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். சிவகங்கையைச் சேர்ந்தவர்
நலவிரும்பி,60. ஆட்சி மாறும்போதெல்லாம் இவரது கரை வேட்டியும் மாறும்.
அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற சமயத்தில், சென்னை பஜார் பக்கம் சென்றபோது
விருதுநகரைச் சேர்ந்த முனியாண்டி அறிமுகமானார். 'யாருக்காவது ஆசிரியர் வேலை
வேண்டுமென்றால் வாங்கித் தருகிறேன்' என்று நலவிரும்பி கூறினார். தன்னை
நம்ப வேண்டும் என்பதற்காக சில அமைச்சர்களுடன் எடுத்துக்கொண்ட போட்டோக்களை
காண்பித்தார். இதை நம்பி முனியாண்டியின் உறவினர் மற்றும் சிலர் ரூ.பல
லட்சம் கொடுத்தனர். பின், ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர்கள், நலவிரும்பியிடம்
பணத்தை கேட்டனர். 'இதேபோல் ஆட்களை பிடித்து தந்தால் பாதிக்கு பாதி கமிஷன்
தருகிறேன்' என்று நலவிரும்பி ஆசை வார்த்தை கூறினார். இதைதொடர்ந்து, தாங்கள்
ஏமாந்தது போல், மற்றவர்களும் ஏமாற அவர்கள் உடந்தையாக இருந்தனர். ஆசிரியர்
வேலைக்கு பி.எட்., தகுதிக்கு ரூ.4.50 லட்சம், முதுநிலைக்கு ரூ.5.50 லட்சம்
என கோவை, பெரம்பலூர், விருதுநகர், சிவகங்கை என தமிழகம் முழுவதும் கைவரிசை
காட்டி ரூ.4 கோடி வரை மோசடி செய்தனர்.
இதுகுறித்து புகார்கள் குவிய, ஆக. 4ல் புரோக்கர்கள் குமரேசன், முனியாண்டி,
மரியநாயகம், திருமால் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இதை
அறிந்த நலவிரும்பி, கர்நாடகா மாநிலம் ஹம்பிநகரில் பதுங்கினார். மொபைல்
போன் உதவியுடன் நேற்று முன் தினம் அவரை போலீசார் கைது செய்தனர்.