ADDED : ஆக 29, 2011 12:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை அண்ணாநகர் மெயின்ரோடு நடைபாதை ஆக்கிரமிப்பில் இருப்பதால், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.
மதுரையின் பரபரப்பான பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி ஜரூராக நடந்து வருகிறது. புகார் அடிப்படையில் நடவடிக்கைகள் இருந்தாலும், அதிகாரிகள் தானாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் சில பகுதிகள் உள்ளன. அதில் ஒன்று அண்ணாநகர். அதன் மெயின்ரோடு நடைபாதை முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ளது. காலையில் கடைகளும், மாலையில் மாடுகளை வைத்து பால் கறப்பதற்கும் பயன்படுத்துகின்றனர். சில இடத்தில் நடைபாதைக்கு பதிலாக கடை உள்ளது. அச்சத்தில் புகார் தர யாரும் முன்வருவதில்லை. சிலர் முயன்ற போது அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இப்பிரச்னைக்கு யார்தான் முற்றுப்புள்ளி வைப்பதோ? தெரியவில்லை.

