ADDED : செப் 06, 2011 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் பாங்க் ஆப் பரோடா ஏ.டி.எம்., களில் 4.5 லட்சம் ரூபாய் மாயமானது தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர்.
எஸ்.ஐ.எப்., நிறுவனம் மூலம் பாங்க் ஆப் பரோடா ஏ.டி.எம்.,களில் பணம் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் உதவி மேலாளராக சீனிவாசன் உள்ளார். இவரின் கீழ் சோனைமுத்து, மணிகண்டன் பணிபுரிகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த 29ம் தேதி பீ.பி.குளம் வங்கி கிளையில் உள்ள கேஷியர் ஹரிதாசிடம் 56 லட்சம் ரூபாய் பெற்று, நகர் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.,களில் வைத்துள்ளனர். அடுத்த நாள் பணம் கணக்கிடுகையில் 4.5 லட்சம் ரூபாய் குறைவு ஏற்பட்டுள்ளது. வங்கியில் இருந்து பணம் கொடுக்கும் போது குறைவாக கொடுத்திருக்கலாம், என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

