sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பொய் புகார்

/

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பொய் புகார்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பொய் புகார்

அ.தி.மு.க., எம்.எல்.ஏ., மீது பொய் புகார்


ADDED : செப் 06, 2011 01:42 AM

Google News

ADDED : செப் 06, 2011 01:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''சிவகங்கை மாவட்டம் அப்பளையில் தாழ்த்தப்பட்டோர் நில அபகரிப்பு குறித்து அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சோழன் பழனிச்சாமி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளதாக,'' மதுரை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அப்பளையை சேர்ந்த கருப்பையா ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில், ''அப்பளையில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை கணேசன் என்பவரிடமிருந்து சோழன் பழனிச்சாமி கிரையம் பெற்று, மனைவி பஞ்சவர்ணம் பெயருக்கு பட்டா மாறுதல் செய்துள்ளார். அவர் மீது புகார் கொடுத்த என்னை அவரது ஆதரவாளர்கள் பழனியப்பன் மற்றும் சிலர் மிரட்டினர். அவர்கள் மீது நான் கொடுத்த புகார்படி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். இம்மனு விசாரணையின் போது, தன்னையும் ஒரு தரப்பாக சேர்க்க கோரி அ.தி.மு.க., பிரமுகர் பழனியப்பன் நேற்று வக்கீல் வி.கண்ணன் மூலம் ஒரு மனு செய்தார். மனுவில், ''சோழன் பழனிச்சாமி முறையாக நிலங்களை வாங்கி, பட்டா மாறுதல் செய்துள்ளார். அதில் எந்தவித விதி மீறலும் இல்லை. கருப்பையாவை மிரட்டியதாக கூறப்படும், ஆக., 11ல் சோழன் பழனிச்சாமி சென்னையில் இருந்தார். மேலும் ஏற்கனவே டி.எஸ்.பி., முன் ஆஜராகி கருப்பையா, அ.தி.மு.க.,வினர் தூண்டுதல் பேரில் புகார் செய்ததாக கூறியுள்ளார். எனவே சோழன் பழனிச்சாமி மீது பொய் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. மனு விசாரணையின் போது, என்னையும் ஒரு தரப்பாக சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். இம்மனுக்கள் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.








      Dinamalar
      Follow us