sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

வேலை கொடுப்பது கடினம்; சுயதொழில் செய்வது எளிது: கலெக்டர் சகாயம் தகவல்

/

வேலை கொடுப்பது கடினம்; சுயதொழில் செய்வது எளிது: கலெக்டர் சகாயம் தகவல்

வேலை கொடுப்பது கடினம்; சுயதொழில் செய்வது எளிது: கலெக்டர் சகாயம் தகவல்

வேலை கொடுப்பது கடினம்; சுயதொழில் செய்வது எளிது: கலெக்டர் சகாயம் தகவல்


ADDED : செப் 07, 2011 02:45 AM

Google News

ADDED : செப் 07, 2011 02:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : ''எல்லோருக்கும் வேலை கொடுப்பது கடினம்.

சுயதொழில் துவங்குவது எளிது,'' என, மதுரை மடீட்சியாவில் நடந்த தொழில்முனைவோர் கருத்தரங்கில் கலெக்டர் சகாயம் தெரிவித்தார்.சிறு,குறு, நடுத்தர நிறுவனங்களுக்கான மானியம், சலுகைகள் வழங்குவது குறித்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வேலையில்லா இளைஞர்கள் நிறைய பேர் என்னிடம் வேலை கேட்டு வருகின்றனர். சட்டத்திற்குட்பட்டு வேலைதர நிறைய துறைகள் உள்ளன. வேலை கொடுப்பது என்னால் இயலாத விஷயம். அதேசமயம் எதையும் எதிர்பார்க்காமல் சுயதொழில் துவங்கலாம். வறுமையில் தான் வாழ்க்கையின் பெருமை உள்ளது. நேர்மையுடனும், துணிச்சலுடனும் தொழில் செய்தால் வெற்றி நிச்சயம். அதன்மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும்.மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கான வரவேற்பு அதிகமாக உள்ளது. கிராமப்புறங்களில் பால் மட்டும் உற்பத்தி செய்யாமல் தயிர், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீமாக மாற்றினால் கூடுதல் லாபம் பெறலாம். எதையும் வித்தியாசமாக சிந்தித்து செயல்படுத்த வேண்டும், என்றார்.மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மருதப்பன் வரவேற்றார். எம்.எஸ்.எம்.இ., உதவி இயக்குனர் ஆருண் ரசீத், டான்ஸ்டியா துணைத் தலைவர் ஞானசம்பந்தன், தொழில்மைய மேலாளர் ராமசுப்ரமணியன், தொழில் முதலீட்டு கழக மேலாளர் அருணாச்சலராஜன், மனிதவள பயிற்சியாளர் அய்யங்கார் கருத்தரங்க அமர்வுகளில் பேசினர். உதவி பொறியாளர் சேகர் நன்றி கூறினார்.








      Dinamalar
      Follow us