/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலீஸ் கமிஷனரிடம் எப்போது புகார் செய்யலாம்?
/
போலீஸ் கமிஷனரிடம் எப்போது புகார் செய்யலாம்?
ADDED : செப் 13, 2011 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை போலீஸ் கமிஷனர் கண்ணப்பன், தினமும் மதியம் 12.30 மணி முதல் 2 மணி வரை பொதுமக்களிடம் நேரடியாக புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.இதனால் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சில சமயங்களில், அலுவல் விஷயமாக வெளியே சென்றுவிட்டு அவர் வர தாமதம் ஆவதால், மதியம் வரை மக்கள் காத்திருக்கின்றனர். இதை தவிர்க்க, இனி திங்கள், புதன், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் மதியம் 12 மணி முதல் 2 மணி வரை நேரில் புகார் கொடுக்கலாம் என கமிஷனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.