/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையே குலுங்க... குலுங்க... வந்த மீனாட்சி கோயில் தேர்கள்; 'ஹர ஹர சங்கரா... மீனாட்சி சுந்தரா...' என பக்தர்கள் பரவசம்

ADDED : மே 10, 2025 07:00 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவில் நேற்று மாசி வீதிகளில் மக்கள் வெள்ளத்தில் ஆடி அசைந்து வந்தன தேர்கள். 'ஹர ஹர சங்கரா... மீனாட்சி சுந்தரா...' என பக்தர்கள் கோஷமிட்டு பரவசம் அடைந்தனர்.
இக்கோயில் சித்திரைத்திருவிழா ஏப்.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நடந்த நிலையில், நேற்று தேரோட்டம் நடந்தது. கீழமாசி வீதியில் தேர்களில் அம்மனும், சுவாமியும் எழுந்தருளினர். தேர்களை காக்கும் கருப்பணசுவாமிக்கு பூஜை நடந்தது.
சுவாமி தேர் காலை 6:12 மணிக்கும், அம்மன் தேர் காலை 6:24 மணிக்கும் புறப்பட்டு மாசி வீதிகளில் வலம் வந்தன.
சிவ பக்தர்கள் கைலாய வாத்தியங்களை முழங்கியபடியும், பல்வேறு இசைகளை இசைத்தபடியும் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் பதிகம் பாடியபடியும், 'ஹர ஹர சங்கரா... மீனாட்சி சுந்தரா 'என பக்தி முழக்கமிட்டும் வலம் வந்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் மக்கள் வடம் பிடித்து தேர்களை அழைத்து வந்து முறையே மதியம் 12:15 மணிக்கும், 12:30 மணிக்கும் நிலைநிறுத்தினர்.
இதுபோன்று எங்கேயும் இல்லை
பல்வேறு வெளிநாட்டினர் தேரோட்டத்தை பக்திபரவசத்துடன் பார்த்தனர். இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ரபேல், ஒஹானா தம்பதி கூறுகையில் திருவிழாவில் இவ்வளவு மக்கள் கூடுவது வியப்பாக இருக்கிறது. உலகில் இதுபோன்ற திருவிழாவை பார்த்ததில்லை. மீனாட்சியம்மன் வேடமிட்டு பக்தர்கள் வந்தது அருமை'' என்றனர்.