தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 10/11/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 10/11/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சிகள் 10/11/2026


UPDATED : நவ 10, 2026 10:06 AM

ADDED : நவ 10, 2026 10:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 10:06 AM ADDED : நவ 10, 2026 10:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கந்த சஷ்டி விழா – முதல் நாள்

யாகசாலை பூஜை, சுப்பிரமணியர், சண்முகர், உற்ஸவ நம்பியார், சேவார்த்திகளுக்கு காப்பு கட்டுதல்: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 7:00 மணி, சஷ்டி மண்டபத்தில் ‘கந்த சஷ்டி மகிமை’ – பக்தி சொற்பொழிவு: நிகழ்த்துபவர் சித்ரா, இரவு 7:00 மணி, பக்தி இன்னிசை, இரவு 8:00 மணி.

யாகசால பூஜைகள், காப்பு கட்டுதல்: முருகன் கோயில், சோலைமலை, அழகர்கோவில்,காலை 8:00 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 10:00 மணி, மாலை 4:00 மணி, அன்ன வாகனத்தில் சுவாமி புறப்பாடு, காலை 11:00 மணி, திருமுருகாற்றுப்படையை நக்கீரருக்கு தந்தருளும் திருப்பரங்குன்றம் முருகன் சந்தன அலங்காரம், மாலை 4:00 மணி.

முருகனுக்கு விசேஷ அபிஷேகம், வெட்டிவேர் அலங்காரம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:30 மணி.

ஸ்கந்த ஹோமம்: தண்டாயுதபாணி சுவாமி கோயில், நேதாஜி ரோடு, மதுரை, அதிகாலை 4:00 மணி, ருத்ர ஜெப அபிஷேக ஆராதனை, அதிகாலை 5:00 மணி, சண்முகர் அர்ச்சனை, காலை 6:00 மணி, விரதக்காப்பு கட்டுதல், காலை 7:00 மணி, புஷ்பங்கி அலங்காரம், காலை 9:00 மணி, சந்தனக்காப்பு அலங்காரம், மாலை 5:00 மணி.

வள்ளி தேவசேனா சமேத சிங்கார வேலன் சிறப்பு அபிஷேகம், கந்த சஷ்டி கவசம் பாராயணம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை,காலை 8:30 மணி, சண்முகர் அர்ச்சனை, மாலை 6:00 மணி.

சிறப்பு அபிஷேகம், ஆராதனை: தங்கமய முருகன் கோயில், சிவகங்கை ரோடு, விளத்துார், மதுரை, காலை 9:00 மணி.

கோயில்

அனுஷ உற்ஸவம்: மஹா பெரியவர் கோயில், வ.உ.சி., தெரு, ஆனையூர் மெயின் ரோடு, கூடல் நகர், மதுரை,மஹா பெரியவர் விக்ரகம், வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5:30 மணி, ‘உண்டென்பாற்கு உண்டு’ – ஆன்மிக சொற்பொழிவு: நிகழ்த்துபவர் எழுத்தாளர் ஆத்மார்த்தி, ஏற்பாடு: அனுஷத்தின் அனுக்கிரக நிறுவனர் நெல்லை பாலு, இரவு 7:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

பெரியபுராணம்: நிகழ்த்துபவர் – மல்லிகா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

ராமகிருஷ்ண பரமஹம்சர் – வாழ்வும், வாக்கும்: நிகழ்த்துபவர் – சுவாமி நித்தியானந்தகிரி, 14, பாரதியார் தெரு, சீதாலட்சுமி நகர் பூங்கா அருகில், கலைநகர் 2வது மெயின்ரோடு, மதுரை, ஏற்பாடு: சாயல்குடி ஆதீனம், மாலை 6:30 மணி.

‘கந்தபுராணம் – பார்வதி கல்யாணம்’ தொடர் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – வாரியார் கிருஷ்ணா, சுந்தர நாட்டாமை லக்ஷனா திருமண மண்டபம், பெரிய ரத வீதி, திருப்பரங்குன்றம், மாலை 6:15 மணி.

கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, சிறப்பு வழிபாடு, மாலை 6:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us