தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 16/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 16/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 16/10/2026


UPDATED : அக் 16, 2026 07:55 AM

ADDED : அக் 16, 2026 12:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 07:55 AM ADDED : அக் 16, 2026 12:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நவராத்திரி விழா

* ஊஞ்சல் அலங்காரம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, மாலை 6:00 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* சுந்தரவல்லி தாயார் சிறப்பு அலங்காரத்தில் புறப்பாடு: கள்ளழகர் கோயில், அழகர்கோவில், மாலை 5:10 மணி, திருக்கல்யாண மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகள், மாலை 6:30 மணி.

* காமாட்சி அலங்காரம்: மகா துர்க்கையம்மன் கோயில், சிலைமான், புளியங்குளம், மதுரை, மாலை 6:05 மணி.

* மகாலட்சுமி அலங்காரம்: உச்சினி மாகாளியம்மன் கோயில், நேதாஜி ரோடு, மதுரை, மாலை 6:00 மணி, விசேஷ பூஜை, இரவு 10:00 மணி.

* நாகம் எய்த படலம் அலங்காரம்: காசி விஸ்வநாதர் கோயில், தெற்காவணி மூல வீதி, மதுரை, ஏற்பாடு: மதுரை வெள்ளியம்பலம் திருப்பரங்குன்றம் ஒடுக்கம் வகையறா தர்ம டிரஸ்ட், மாலை 6:00 மணி.

* நீலாய தாட்சினி அலங்காரம்: தாஷ்டீக பாலகுருநாத அங்காள பரமேஸ்வரி கோயில், வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி.

* மலைமகள், அலைமகள், கலைமகள் அலங்காரம்: சக்தி சந்நியாசி சுவாமி கோயில், புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, விளக்கு பூஜை, ஏற்பாடு: தனலட்சுமி மகாசபை, மாலை 6:00 மணி.

* அன்னபூரணி அம்மன் அலங்காரம்: பொன்முனியாண்டி சுவாமி கோயில், பொன்மேனி, மதுரை, மாலை 6:00 மணி, அஷ்ட சக்தி தலைப்பில் சொற்பொழிவு: நிகழ்த்துபவர் – ஸ்ரீனி விமலி, மாலை 6:30 மணி.

* மகாலட்சுமி அலங்காரம்: நவசக்தி விநாயகர் கோயில், டீன் குடியிருப்பு, மதுரை, மாலை 6:00 மணி, சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:15 மணி.

* சீதா சுயம்வரம் அலங்காரம்: ராமசுவாமி நவநீத கிருஷ்ணசுவாமி கோயில், ராமாயணச்சாவடி, வடக்குமாசி வீதி, மதுரை, மாலை 6:00 மணி, திருவாராதனம், இரவு 7:00 மணி.

* அன்னபூரணி அலங்காரம், லலிதா சஹஸ்ரநாம லட்சார்ச்சனை, சுவாசினி பூஜை: சிருங்கேரி சங்கர மடம், பைபாஸ் ரோடு, மதுரை, மற்றும் அம்மன் சன்னதி தெரு, மதுரை, காலை 7:30 மணி, மாலை 6:30 மணி.

* புவனேஸ்வரி அலங்காரம்: மதுரை நகரத்தார் விடுதி, வடக்கு சித்திரை வீதி, மதுரை, ஏற்பாடு: நகரத்தார் விஜயதசமி விழாக்குழு, மாலை 6:00 மணி.

* பிரித்தியங்கார தேவி அலங்காரம்: ராஜராஜேஸ்வரி அம்மன் கோயில், எச்.எம்.எஸ்., காலனி, மதுரை, மாலை 6:00 மணி.

* முருகன் வேல் வாங்கும் அலங்காரம்: முத்துமாரியம்மன் கோயில், 3வது தெரு, மோதிலால் மெயின் ரோடு, மதுரை, மாலை 6:00 மணி.

* மங்கையர் திருக்கோலம், நாச்சியார் திருக்கோலம்: நவநீத கண்ணன் சன்னதி, கீழமாரட் செட்டிய தெரு, மதுரை, மாலை 6:00 மணி.

* சண்முகர் பிறப்பு அலங்காரம்: கபாலீஸ்வரி அம்மன் கோயில், மாடக்குளம், மதுரை, மாலை 6:00 மணி.

* மகாலட்சுமி அலங்காரம்: கற்பக விநாயகர் கோயில், பூங்கா நகர் காலனி, கே.கே.நகர், மதுரை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், காலை 10:00 மணி, கூட்டு வழிபாடு, மாலை 6:00 மணி.

* மீனாட்சி அலங்காரம்: காஞ்சி காமகோடி பீடம், ஸ்ரீமடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, காலை 7:00 மணி, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், லட்சார்ச்சனை, மாலை 5:00 மணி.

* அம்மனுக்கு விசேஷ அபிஷேகம், தீபாராதனை: சர்வேஸ்வரர் கோயில், அண்ணாநகர், மதுரை, காலை 10:00 மணி, சிறப்பு அலங்காரம், சஹஸ்ரநாம அர்ச்சனை, மாலை 6:00 மணி, குரு வர்தினி பாலாஜியின் மாணவிகள் பரதநாட்டியம், இரவு 7:00 மணி.

* கொலு, அம்மன் அலங்காரம், விளக்கு வழிபாடு, லலிதா சஹஸ்ரநாம பாராயணம், கூட்டு வழிபாடு: 63வர் குருபூஜை மடம், 97, அம்மன் சன்னதி தெரு, மதுரை, ஏற்பாடு: திருப்பாவை திருவெம்பாவை இசைப்பள்ளி, மாலை 5:00 மணி.

* ஸ்ரீதேவி மாஹாத்மியம் பாராயணம், புஷ்பாஞ்சலி: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, காலை 8:30 மணி, சுவாமி விமோக் ஷானந்தரின் சொற்பொழிவு, மாலை 5:30 மணி, சிறப்பு பஜனை, இரவு 7:00 மணி, அன்னையை எழுந்தருளச் செய்யும் ‘கடஸ்தாபனம்’, இரவு 7:30 மணி.

* லலிதா சஹஸ்ரநாம பூஜை: சின்மயா மிஷன், டோக் நகர், மதுரை, காலை 6:30 மணி, குருபிரசாத் குழுவின் திருப்புகழ் பாராயணம், மாலை 6:30 மணி.

* கோ பூஜை: காஞ்சி காமகோடி பீடம், முள்ளிப்பள்ளம், சோழவந்தான், காலை 9:00 மணி, கொலுவில் உள்ள காமாட்சி அம்மனுக்கு லலிதா சஹஸ்ரநாம சுவாசினி பூஜை, கன்யா பூஜை, தீபாராதனை, மாலை 6:00 மணி.

* செல்வமும் செருக்கும் – மகாலட்சுமியின் பாடம்: கதை சொல்பவர் – ராமகிருஷ்ணன், பாலாம்பிகை அருட்குடில், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணி.

* நவராத்திரி கொலு சிறப்பு பூஜை, லலிதா சஹஸ்ரநாம பாராயணம்: வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி.

* கொலு தரிசனம்: பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையம், அனுமார் கோயில் படித்துறை ரோடு, சிம்மக்கல், மதுரை, மாலை 5:00 மணி.

கோயில்

* புரட்டாசி கடைசி வெள்ளியை முன்னிட்டு சுவாமிக்கு கவச அலங்காரம்: முனியாண்டி சுவாமி கோயில், யூனியன் வங்கி காலனி 4வது தெரு, விளாங்குடி, இரவு 7:00 மணி.

* ராகு கால சிறப்பு பூஜை: பாதாள குபேர பைரவர் கோயில், வடக்கு சித்திரை வீதி, மதுரை, காலை 10:30 மணி.

பக்தி சொற்பொழிவு

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

* திருக்குறள்: நிகழ்த்துபவர் – தயாபரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

* ‘செயல்பாட்டு மூலதனத்தை நிர்வகித்தல், முக்கிய நிதி விகிதங்கள்’ தலைப்பில் விருந்தினர் விரிவுரை: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், அருப்புக்கோட்டை ரோடு, மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர்: மதுரை யூரோகிரிப் டயர்ஸ் குழு துணைத் தலைவர் குத்தால சங்கரன், காலை 11:30 மணி.

* பள்ளிகளுக்கு இடையிலான கலாசார, கலை போட்டிகள்: வி.எம்.ஜெ., பள்ளி, புதுராமநாதபுரம் ரோடு, மதுரை, சிறப்பு விருந்தினர்கள்: ஜி.டி., டேக்ஸ், அக்கவுண்ட்ஸ் சொல்யூஷன்ஸ் உரிமையாளர் சித்தாந்த், பர்ஸ்ட்க்ரை இன்டெலியாட்ஸ் பிரீ ஸ்கூல் முதல்வர் பொன்னெழில் நீரஜா, மதியம் 2:00 மணி.

* டிஜிட்டல் பொருளாதாரம், பொருளாதார வளர்ச்சி குறித்து மாநில அளவிலான மாணவர் கருத்தரங்கம்: மதுரைக் கல்லுாரி, மதுரை, தலைமை: மதுரைக் கல்லுாரி வாரிய தலைவர் சீதாராமன், சிறப்பு விருந்தினர்கள்: இந்திய பொருளாதார சங்கத் தலைவர் துளசி பிருந்தா, பாரதிதாசன் பல்கலை பேராசிரியர் நடராஜ மூர்த்தி, ஏற்பாடு: பொருளாதார துறை, காலை 10:00 மணி.

பொது

* மடீட்சியாவின் 8வது ‘ஆயுஷ் எக்ஸ்போ 2026’ – பாரம்பரிய மருத்துவ கண்காட்சி துவக்க விழா: மடீட்சியா ஹால், மதுரை, தலைமை: தலைவர் செந்திகுமார், துவக்கி வைப்பவர்: எம்.எல்.ஏ., கோபிசன், மூத்த பரம்பரை டாக்டர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவோர்: மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குமார், தேசிய சித்த மருத்துவ நிறுவன இயக்குநர் செந்தில்வேல், இம்ப்காப்ஸ் தலைவர் கண்ணன், தன்வந்திரி நிலையம் ஆயுர்வேத வைத்தியசாலை தலைவர் பிரேம்வேல், காலை 10:30 மணி, இலவச மருத்துவ முகாம், காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை, மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை, கண்காட்சி நேரம் : காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை.

* வன விலங்குகளை கட்டுப்படுத்த தவறிய வனத்துறை, மாநில அரசை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: ராஜாஜி சிலை அருகே, திருமங்கலம், தலைமை: மாநில ஒருங்கிணைப்பாளர் தேவராஜன், ஏற்பாடு: மாவட்ட பாரதிய கிசான் சங்கம், காலை 9:30 மணி.

* சர்வ சமய அமைதி பிரார்த்தனை: சேவாலயம் மாணவர் இல்லம், செனாய் நகர், மதுரை, தலைமை: பல்சமய ஒற்றுமை நட்புறவு வளர்ச்சி மையம் செயலாளர் மோகன், அருட்செய்தி வழங்குபவர்: வர்மா மற்றும் ஆயுர்வேத டாக்டர் கருணாகரன், மாலை 6:00 மணி.

விளையாட்டு

* மாநில அளவிலான 17 வயது ஆடவர், மகளிருக்கான பேட்மின்டன் போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மாவட்ட பேட்மின்டன் சங்கம், காலை 8:00 மணி.

* வருவாய் மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான குடியரசு தின தடகள போட்டிகள்: ரேஸ்கோர்ஸ், மதுரை, ஏற்பாடு: மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகம், பள்ளிக்கல்வித்துறை, காலை 8:00 மணி.

கண்காட்சி

* பண்டிகை கால ஆடைகள் ‘பாப் – அப்’ சேல்: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: ஹியூஸ் பொட்டிக், காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us