தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026

மதுரை இன்றைய நிகழ்ச்சி 24/10/2026


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 09:26 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 09:26 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில்

12 ஜோதிர்லிங்க வழிபாடு: மாதா அமிர்தானந்தமயி ஆசிரமம், மூலக்கரை, மதுரை, ஏற்பாடு: ஹிந்து முன்னணி, காலை 9:00 மணி.

சனிக்கிழமை சிறப்பு பூஜை: கிருஷ்ணன் கோயில், மந்தைத் திடல், கீழையூர், ஏற்பாடு: கீழையூர் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – கோகுல்நாத், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், காலை 7:15 மணி.

தாயுமானவர்: நிகழ்த்துபவர் – சுந்தரகண்ணன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

லலிதா சஹஸ்ரநாம பாராயணம், விளக்கவுரை: நிகழ்த்துபவர் – சுவாமினி ப்ரசிதானந்த சரஸ்வதி, சுவாமி தத்வானந்தா ஆசிரமம், தபால்தந்தி நகர், மதுரை, காலை 7:00 மணி, பகவான் ரமணரின் ‘சத்தர்ஸனம்’ விளக்கவுரை, காலை 9:15 மணி.

சொற்பொழிவு, கூட்டுப்பிரார்த்தனை: நிகழ்த்துபவர் – ஹரிதாஸ், நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

வழக்குகளுக்கான மாற்றுத் தீர்வு – மாதிரி நீதிமன்ற அமர்வு: ஆர்.எல்.இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீஸ், டி.வி.ஆர்., நகர், மதுரை, முன்னிலை: ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மூத்த வழக்கறிஞர் சீனிவாச ராகவன், காலை 11:15 மணி.

ஸ்மார்ட் ஸ்லெங்கியன் திறன் வெளிப்பாடு மற்றும் இன்டாக் – யானை உலகம்: மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் பள்ளி, திருமங்கலம், முன்னிலை: பள்ளி முதல்வர் ஈஸ்டர் ஜோதி, சிறப்பு விருந்தினர்: இன்டாக் ஒருங்கிணைப்பாளர் வாணி, காலை 9:00 மணி.

வியூகம் 2026 – கிராமிய முகாம்: இரணீயம், மதுரை, மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் மருத்துவ முகாம், காலை 11:00 மணி, குழந்தைகளுக்கான உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், ஏற்பாடு: சமூக அறிவியல் கல்லுாரி முதுகலை சமூகப்பணி துறை, மாலை 5:00 மணி.

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக உலக சாதனை முயற்சிக்கான ஓவியப் போட்டி: வைகை பொறியியல் கல்லுாரி, மதுரை, பங்கேற்பு: பள்ளி, கல்லுாரி மாணவர்கள், ஏற்பாடு: ரெஹாபிண்டியா அறக்கட்டளை, காலை 9:00 மணி.

விசா பியூச்சர் லேப் தொடக்க விழா: விசா சி.பி.எஸ்.இ., பள்ளி, நாகமலை புதுக்கோட்டை, தொடங்கி வைப்பவர்: வேளாண் உணவு வர்த்தக மைய நிறுவனர் ரத்தினவேலு, காலை 11:00 மணி.

சக்தி சந்தை – சிறுதானிய உணவு வகைகள், நர்சரி பொருட்கள், இயற்கை அழகு சாதனங்கள் கொண்ட ஆரோக்கிய சந்தை: மகாத்மா பள்ளி, சர்வேயர் காலனி, மதுரை, சிறப்பு விருந்தினர்: டி.ஐ.ஜி., அபினவ் குமார், பள்ளிக்குழும நிறுவனர் பிரேமலதா, காலை 9:30 முதல் மாலை 5:00 மணி வரை.

பொது

மகாத்மா காந்தி தொகுப்பு நுால்கள் – பகுதி 25 – நுால் மதிப்பாய்வுரை கூட்டம்: காந்தி மியூசியம், மதுரை, மதிப்பாய்வுரை வழங்குபவர் – மியூசிய ஆராய்ச்சி அலுவலர் தேவதாஸ், மாலை 4:30 மணி.

யாதவ வரன்கள், பெற்றோர் சந்திப்பு கூட்டம்: மகாசபை கட்டடம், புதுார், மதுரை, ஏற்பாடு: புதுார் யாதவ மகாசபை, காலை 10:00 மணி.

ஆலோசனைக் கூட்டம்: யாதவ மகாசபை திருமண மண்டபம், யூனியன் அலுவலகம் எதிரே, மேலுார், ஏற்பாடு: மேலுார் யாதவ மகாசபை, மாலை 6:00 மணி.

சைவ சித்தாந்த முதலாண்டு மாலை நேரக் கல்லுாரி சான்றிதழ் வகுப்புகள் தொடக்கம்: தருமபுர ஆதீன மடம், வடக்குமாசி வீதி, மதுரை, ஏற்பாடு: ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாலை 6:00 மணி.

சி.ஐ.ஐ., பிரின்சிபல் கனெக்ட் 2026 – மாறிவரும் கல்விச் சூழல், எதிர்காலத்திற்கு ஏற்ற கற்றல், தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, அடுத்த தலைமுறையை தயார்படுத்தும் உத்திகள் குறித்து கலந்துரையாடல்: ஜி.ஆர்.டி., ஓட்டல், ரிங் ரோடு, மதுரை, கருத்தாளர்கள்: மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் முத்தையா, சி.பி.எஸ்.இ., டில்லி முன்னாள் இயக்குநர் பாலசுப்பிரமணியன், ஏற்பாடு: இந்திய தொழில் கூட்டமைப்பு, காலை 9:30 மணி முதல்.

மரம் நடும் விழா: ஜெயந்தி வேளாண் பண்ணை, மதுரை – சிவகங்கை மெயின் ரோடு, வரிச்சியூர், மதுரை, தலைமை: கிளப் தலைவர் விஜய், சிறப்பு விருந்தினர்: லயன்ஸ் கிளப் இன்டர்னேஷனல் ஒருங்கிணைப்பாளர் சையத் ஜாபர், ஏற்பாடு: மதுரை ஆலவாய் லயன்ஸ் கிளப், காலை 11:00 மணி.

மதுரை மேனேஜ்மென்ட் அசோசியேஷன் கூட்டம்: ஓட்டல் மாஸ்க்வா, தமிழ்ச்சங்கம் ரோடு, மதுரை, தலைமை: சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், சிறப்பு விருந்தினர்: மாநகராட்சி தலைமை மருத்துவ அதிகாரி ஸ்ரீகோதை, மாலை 6:30 மணி.

கண்காட்சி

பில்டு எக்ஸ்போ 2026: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: பில்டர்ஸ் அசோசியேஷன் ஆப் இந்தியா, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

விவேகானந்தா சாரீஸ் வழங்கும் தீபாவளி சிறப்பு விற்பனை: அர்பன் ஸ்பைஸ், கே.கே.நகர், மதுரை, காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us