/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரை டிராவல்ஸ் ஓனர் சேலத்தில் தற்கொலை
/
மதுரை டிராவல்ஸ் ஓனர் சேலத்தில் தற்கொலை
ADDED : அக் 25, 2025 04:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: மதுரை மாவட்டம் ஊத்தங்குடி, வள்ளல் நகரை சேர்ந்தவர் திவாகர், 29. சொந்தமாக டிராவல்ஸ் தொழில் செய்து வந்தார். இதுதொடர்பாக அக். 20ல், சேலம் வந்த அவர், சூரமங்கலத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்.
அன்று இரவு துாங்கச்சென்ற அவர், நேற்று முன்தினம் முதல், வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த விடுதி மேலாளர் பசீர் அகமது, அறைக்கு சென்று பார்த்தபோது, திவாகர் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. அவர் தகவல்படி, சூரமங்கலம் போலீசார், உடலை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.

