/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மதுரையின் வருமான வரித்துறை இலக்கு ரூ.3 ஆயிரத்து 944 கோடி
/
மதுரையின் வருமான வரித்துறை இலக்கு ரூ.3 ஆயிரத்து 944 கோடி
மதுரையின் வருமான வரித்துறை இலக்கு ரூ.3 ஆயிரத்து 944 கோடி
மதுரையின் வருமான வரித்துறை இலக்கு ரூ.3 ஆயிரத்து 944 கோடி
ADDED : நவ 14, 2024 06:58 AM

மதுரை; 'இந்தாண்டு மதுரை வருமான வரித்துறை அலுவலகம் மூலம் ரூ.3 ஆயிரத்து 944 கோடிக்கு வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என வருமான வரிபிடித்தம் தொடர்பான கூட்டத்தில் தெரிவித்தனர்.
மதுரையில் வருமான வரித்துறை சார்பில் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடந்தது. வருமான வரி இணை கமிஷனர் நித்யா வரவேற்றார். முதன்மை கமிஷனர் சஞ்சய்ராய் தலைமை வகித்தார்.
முதன்மை கமிஷனர் வசந்தன் பேசுகையில், ''வருமான வரித்துறைக்கு வருமான வரி பிடித்தம் (டி.டி.எஸ்.,) மூலம் 50 சதவீத வருவாய் கிடைக்கிறது. இந்த நிதியாண்டில் தேசிய அளவில் 99 லட்சத்து 61 ஆயிரம் வருமான வரி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழகத்தின் பங்கு ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 860 கோடி இலக்காக உள்ளது. இது தேசிய இலக்கில் 6 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் மதுரையின் பங்கு ரூ.3 ஆயிரத்து 944 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுஉள்ளது, என்றார்.
கோவை வருமான வரி அலுவலர் (டிடிஎஸ்.,) சஞ்சய் ஜோசப், மதுரை வன பாதுகாப்பு அலுவலர் பத்மாவதி, மத்திய பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் பவன்குமார் குப்தா, தென்மண்டல போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் ஜெயசங்கர், ஜி.எஸ்.டி., கமிஷனர் அன்வர்அலி, மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன், பி.எஸ்.என்.எல்.,பொதுமேலாளர் லோகநாதன், அகில இந்திய வானொலி நிலைய தலைமை அலுவலர் லீலாவதி பாராட்டப்பட்டனர்.