ADDED : டிச 28, 2024 06:14 AM

மதுரை : காஞ்சி மஹா பெரியவர் ஸித்தியடைந்த தினத்தையொட்டி மதுரை காமகோடி மடத்தில் வார்ஷிக ஆராதனை நடந்தது. ராதாகிருஷ்ணன் தலைமையில் வேத விற்பன்னர்கள் குரு வந்தனம், விக்னேஷ்வர பூஜை, அனுக்ஞை, சங்கல்பம், மஹன்யாசம், ருத்ர ஏகாதசி, சிறப்பு ஹோமங்கள், பூர்ணாஹுதி நடந்தது. மஹா பெரியவர் விக்ரஹத்திற்கு அபிஷேகம், ஆராதனை நடந்தன. பஞ்சரத்தின கீர்த்தனைகளை பாலாமணி ஈஸ்வர் குழுவினர் பாடினர். மடத்தின் செயலாளர், வெங்கடேசன், நிர்வாகிகள் ஸ்ரீராமன், ஸ்ரீகுமார், ராமகிருஷ்ணன், சங்கரராமன், அம்மா கேட்டரிங் கிருஷ்ண ஐயர், ராமேஸ்வரம் மடத்தின் மேலாளர் சுந்தர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் காஞ்சி மடத்தில் நடந்த ஆராதனையில் திருவேடகம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி தாளாளர் சுவாமி பரமானந்தா ஆசி வழங்கினார். விவேகானந்தா கல்லுாரி மாணவர்கள் திருப்பாவை, திருவெம்பாவை, நாம சங்கீர்த்தனம் பாடினர். நிர்வாகிகள் ஸ்ரீகுமார், பூஜகர் வெங்கட்ராமன், ஆசிரியர் வீரமணிகண்டன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.