/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மக்காச்சோள செயல் விளக்கத் திடல் 'ஹைபிரிட்' விதைகள் தயார்
/
மக்காச்சோள செயல் விளக்கத் திடல் 'ஹைபிரிட்' விதைகள் தயார்
மக்காச்சோள செயல் விளக்கத் திடல் 'ஹைபிரிட்' விதைகள் தயார்
மக்காச்சோள செயல் விளக்கத் திடல் 'ஹைபிரிட்' விதைகள் தயார்
ADDED : ஆக 01, 2025 02:21 AM
மதுரை: தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் முதன்முறையாக மதுரையில் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைப்பதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வேளாண் இணை இயக்குநர் பொறுப்பு ராணி கூறியதாவது:
இத்திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் 3 ஆயிரம் எக்டேரில் மக்காச்சோள செயல்விளக்கத் திடல் அமைக்கப்பட உள்ளது. ஒரு விவசாயிக்கு ஒரு எக்டேர் பரப்பில் பயிர் சாகுபடி செய்ய ரூ.6 ஆயிரம் மதிப்புள்ள 'ஹைடெக் 5204' ரக விதைகள், நானோ யூரியா, எம்.என். மிக்சர், உயிர் உரங்கள் வழங்கப்படும்.
அடுத்த வாரம் விதைகள் மதுரை வேளாண் துறைக்கு வந்து விடும். திடல் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுக வேண்டும். அங்கு உழவர் அலுவலர் தொடர்பு திட்ட (யு.ஏ.டி.டி., ஆப்) செயலியில் பதிவு செய்து சிட்டா, ஆதார் அட்டை நகலை ஒப்படைக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு செயல்விளக்கத் திடல் அமைக்க மானிய விலையில் அனைத்தும் வழங்கப்படும் என்றார்.