/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.52 லட்சம் மோசடி ஆன்லைனில் கைவரிசை காட்டியவர் கைது

ADDED : டிச 12, 2024 08:13 AM

மதுரை : மதுரையில் ஆன்லைனில் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகக் கூறி ரூ. 52 லட்சம் மோசடி செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
சிலைமான் பகுதியைச் சேர்ந்தவர் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜூன் 28ல் இவரிடம் பகுதி நேர வேலை வாங்கி தருவதாகக் கூறி ஆன்லைன் மூலம் ரூ. 52 லட்சத்து 66 ஆயிரத்து 417 ஐ பல்வேறு வங்கி கணக்குகள் மூலம் சிலர் மோசடி செய்தனர். மாவட்ட சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்ததையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. உடனே பணம் அனுப்பிய வங்கி கணக்குகளில் இருந்த ரூ. 76 லட்சத்து 52 ஆயிரத்து 625 முடக்கப்பட்டது.
விசாரணையில் கேரள மாநிலம் காயாம்குளத்தை சேர்ந்த அன்வர்சா, குறிப்பிட்ட வங்கியில் போலி நடப்பு கணக்கு துவங்கி, காசர்கோடு அப்சல் உதவியுடன் பணமோசடி செய்தது தெரிந்தது. போலீசார் அன்வர்சாவை கைது செய்து அலைபேசிகள், சிம்கார்டுகள், வங்கி பாஸ்புக்குகள், காசோலைகள், ஏ.டி.எம்., கார்டுகளை பறிமுதல் செய்தனர். இவர்கள் பல்வேறு மாநிலங்களில் ஆன்லைன் மூலம் ரூ.1.8 கோடி வரை மோசடி செய்ததும், ரூ.50 ஆயிரம் வரை கமிஷன் பெற்றதும் தெரிய வந்துள்ளது.
பொதுமக்கள் பணமோசடி தொடர்பான சைபர் குற்றங்கள் குறித்து 1930 எண்ணிலோ cybercrime.gov.in என்ற முகவரியிலோ புகார் அளிக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.