UPDATED : நவ 10, 2026 05:13 PM
ADDED : நவ 10, 2026 10:06 AM

அ நிறம் | அளவு
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் அருகே தும்பநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன் 59. டாஸ்மார்க் கடையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவர் நேற்றிரவு தும்மநாயக்கன்பட்டியிலிருந்து பேரையூருக்கு டூவீலரில் வந்தார்.
அரசு மருத்துவமனை அருகே வந்தபோது, எதிரே டூவீலரில் வந்த பேரையூர் பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த அபூபக்கர் சித்திக் 23, மற்றும் அவரது நண்பர் மோதினர். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஈஸ்வரனை அபூபக்கர் சித்திக் தாக்கினார். இதில் ஈஸ்வரன் இறந்தார். இதையறிந்த ஈஸ்வரனின் உறவினர்கள் பேரையூர் பைபாஸ் ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். அபுபக்கர் சித்திக்கை போலீசார் கைது செய்தனர். எஸ்.பி.தேவநாதன் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார்.
