/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரு பெண் குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை
/
இரு பெண் குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை
ADDED : நவ 22, 2025 09:40 PM

மதுரை: குடும்பத் தகராறு காரணமாக இரு பெண் குழந்தைகளுடன் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாநகர் முடக்கத்தான் அம்பேத்கர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் கோபிராஜ்,40. எலக்ட்ரிசியனான இவருக்கு யுவஸ்ரீ,10, கனிஷ்கா,5, ஆகிய இரு பெண் குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில், கோபிராஜ் தனது இரு மகள்களுடன் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடல்புதூர் போலீசார், 3 பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இரு தினங்களுக்கு முன்பாக கோபிராஜூக்கு, அவரது மனைவியுடன் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கோபிராஜ் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

