ADDED : செப் 03, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாடிப்பட்டி : பரவை அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலாண்மை குழுக் கூட்டம் தலைவர் குமரவேல் தலைமையில் நடந்தது.
உதவி தலைமை ஆசிரியர் ரத்தின பிரியா முன்னிலை வகித்தார். உறுப்பினர் ஆதிலட்சுமி வரவேற்றார். மாணவர்கள் திறன் இயக்கம், போதையில்லா தமிழ்நாடு குறித்து தொடர் விழிப்புணர்வு, மணற்கேணி செயலி மற்றும் துாதுவர்கள், உயர்கல்வி வழிகாட்டி உள்ளிட்ட திட்டமிடுதல் குறித்து ஆலோசனை செய்தனர். முன்னாள் மாணவர்கள், பெற்றோர் குழு உறுப்பினர் சீதா, ஆசிரியர்கள் இமானுவேல், பூங்கொடி பங்கேற்றனர்.