
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் போலீஸ் சார்பில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. கமிஷனர் லோகநாதனும் பங்கேற்றார்.
சர்வதேச போதைப்பொருட்கள் ஒழிப்பு தினத்தையொட்டி நகர் மதுவிலக்கு போலீஸ் சார்பில் ஆயுதப்படை மைதானம் முதல் நத்தம் ரோட்டில் 5 கி.மீ., துாரம் ஓட்டம் நடந்தது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், போலீசார் பங்கேற்றனர். ஓட்டத்தை துவக்கி வைத்த கமிஷனர் லோகநாதன், அய்யர்பங்களா வரை ஓடினார். வென்ற மாணவர்களுக்கு பரிசுகள், முதல் 100 பேருக்கு ஹெல்மெட் பரிசு வழங்கினார். துணை, உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.