/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாநகராட்சி கூட்டத்தை பார்வையிட அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கண்டனம்
/
மாநகராட்சி கூட்டத்தை பார்வையிட அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கண்டனம்
மாநகராட்சி கூட்டத்தை பார்வையிட அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கண்டனம்
மாநகராட்சி கூட்டத்தை பார்வையிட அனுமதி மறுப்பு மார்க்சிஸ்ட் கண்டனம்
ADDED : டிச 01, 2024 05:56 AM
மதுரை : மதுரை நகர் மார்க்சிஸ்ட் தரப்பில் தெரிவித்ததாவது: மதுரை மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. இதை பார்வையிட அனுமதிச் சீட்டுடன் முல்லை நகரை சேர்ந்த சிலர் வந்தனர். கூட்ட அரங்க பாதுகாப்பிற்கு இருந்த போலீசார் தடுத்து வெளியேற்றியுள்ளனர்.
முல்லை நகரில் பட்டா கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருவதை கருத்தில் கொண்டு கூட்டத்தை பார்வையிட விடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல. பார்வையாளர்கள் அரங்கில் விதிகளை மீறி செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே தவிர, முறையாக அனுமதியுடன் வந்தவர்களை மறுத்தது சரியல்ல. அதிகாரிகள் விளக்கம் கேட்டு பதில் அளித்து நிலைமையை விளக்கி இருக்கலாம். தடுத்து அனுமதி மறுத்த அதிகாரிகள், போலீசாரை கண்டிக்கிறோம்.
மாநகராட்சி நிர்வாகம் எதிர்காலங்களில் இதுபோன்ற செயல் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.