நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி கணிதத்துறை சார்பில் கணிதம் மற்றும் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் தேசிய கருத்தரங்கு நடந்தது.
முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். துறைத் தலைவர் முத்துக்குமரன் வரவேற்றார்.
மதுரை காமராஜ் பல்கலை பதிவாளர் ராமகிருஷ்ணன், உ.பி. மோதிலால் நேரு தேசிய தொழில்நுட்ப நிறுவன பேராசிரியர் பங்கஜ் பஸ்தவா, வேதாரண்யம் அரசு கல்லுாரி முதல்வர் காமராஜ், அருப்புக்கோட்டை அரசு கல்லுாரி முதல்வர் முத்துபாண்டியன், யாதவர் கல்லுாரி கணிதத்துறை தலைவர் அழகப்பன் உள்ளிட்டோர் பேசினர். பேராசிரியர் வீரம்மாள் நன்றி கூறினார்.
பேராசிரியர்கள் வின்சென்ட், பாஸ்கர், பத்மாவதி, கலாநிதி, மீனா, அங்காளஈஸ்வரி, தீனா, முகமது அலி ஒருங்கிணைத்தனர்.

