ADDED : நவ 04, 2025 04:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில், மேற்கு வங்க கவர்னர் சி.வி.ஆனந்த போஸ், நேற்று குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.
காலை 8:00 மணிக்கு கோயில் வந்த அவரை, துணை கமிஷனர் யக்ஞ நாராயணன் வரவேற்றார்.
சுந்தரராஜ பெருமாள், கல்யாண சுந்தரவள்ளித் தாயார், ஆண்டாள் சன்னதிகளில் தரிசனம் பெற்று, பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதியில் அர்ச்சனை செய்து வழிபட்டார்.
கோயில் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். தோசை பிரசாதம், புகைப்படங்களை பி.ஆர்.ஓ., முருகன் வழங்கினார். பின்னர் கவர்னர் பழநி புறப்பட்டுச் சென்றார்.

