ADDED : நவ 25, 2026 07:42 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை எஸ்.பி.ஓ.ஏ., பள்ளி பள்ளியில் மாணவர்களுக்கான கண், பல் பரிசோதனை முகாம் இரண்டு நாட்கள் நடந்தன.
தாளாளர் கவிஸ்டன் தலைமை வகித்தார். முதல்வர் லதா தொடங்கி வைத்தார். மதுரை ராமச்சந்திரா கண் மருத்துவமனை குழு டாக்டர் ஷாகுல் ஷமீது தலைமையிலும், பல் மருத்துவ குழு டாக்டர் நீரூஸ் அம்ரித் தலைமையிலும் பரிசோதனை நடந்தது. டாக்டர்கள் நிரஞ்சனா, ஏஞ்சலின், பாக்கியராஜ் பங்கேற்றனர். நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்றனர். உதவி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
