தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...

ஒரு போன் போதுமே...


UPDATED : நவ 25, 2026 06:54 PM

ADDED : நவ 25, 2026 06:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 06:54 PM ADDED : நவ 25, 2026 06:54 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* போக்குவரத்து நெரிசல்



மதுரை காளவாசல் சிக்னல் அருகே தேனி மெயின் ரோட்டில் பேக்கரி முன் ‘பஸ்களை நிறுத்தக்கூடாது’ என போக்குவரத்து போலீசார் வைத்த அறிவிப்பு காற்றில் பறக்கிறது. தொடர்ந்து பஸ்களும், ஆட்டோக்களும் பயணிகளை ஏற்றி இறக்குவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சிக்னல் விழுந்தும் செல்ல முடியாத நிலை உள்ளது. விதி மீறுவோருக்கு அபராதம் விதிக்க வேண்டும்.

– கோபால், சொக்கலிங்க நகர்.

* கழிவுநீரால் துர்நாற்றம்



மதுரை அம்மன் சன்னதி பேங்க் ஆப் இந்தியா வங்கி ஏ.டி.எம்., அருகே அடிக்கடி கழிவுநீர் தேங்குகிறது. இதை பயன்படுத்தி சிலர் சிறுநீர் கழிப்பிலும் ஈடுபடுகின்றனர். கடும் துர்நாற்றம் வீசுவதால் அப்பகுதியை கடந்து செல்ல முடியவில்லை. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கின்றனர். மதுரையின் துாய்மையை காக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– கணேஷ், கீழவாசல்

* சிதறும் குப்பை



மதுரை சம்மட்டிபுரம் மெயின் ரோட்டில் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குப்பை தொட்டிகள் நிரம்பி ரோட்டில் சிதறிக் கிடக்கின்றன. துர்நாற்றத்தால் இப்பகுதி குடியிருப்புகளில் ஜன்னல்களை திறக்க முடிவதில்லை. இதனால் முதியவர்கள், குழந்தைகளுக்கு சுவாசக் கோளாறுகள் ஏற்படுகின்றன. குப்பையை தினமும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– நடராஜன், சம்மட்டிபுரம்

* நிரம்பி வழியும் சாக்கடை



மதுரை வார்டு 75 சுந்தரராஜபுரம் மாநகராட்சி பள்ளி முன்புள்ள பாதாள சாக்கடை, அடைப்பின் காரணமாக நிரம்பி ரோட்டில் வெளியேறுகிறது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– மோகன், சுந்தரராஜபுரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us