நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அரசு இருபாலர் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடத்தினர்.
சி.இ.ஒ.ரேணுகா தலைமை வகித்தார். உதவித் திட்ட அலுவலர் சரவணமுருகன் முன்னிலை வகித்தார். 18 வயது வரையிலான 67 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். புதிய தேசிய அடையாள அட்டை, இலவச பஸ், ரயில் பாஸ், செயற்கை உபகரணங்கள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. தலைமை ஆசிரியர் முனியாண்டி, ஒருங்கிணைப்பாளர் சூரியகலா, வட்டார வள மைய மேற்பார்வையாளர் சுதா, கல்வி ஒருங்கிணைப்பாளர் சுகன்யா உட்பட பலர் பங்கேற்றனர்.