/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
போலி சான்று சர்ச்சையில் சிக்கியவருக்கு பணி ஓய்வு சிக்கலில் மீனாட்சி கோவில் நிர்வாகம்

ADDED : பிப் 01, 2025 01:57 AM
மதுரை:மதுரை மீனாட்சி கோவிலில் போலி கல்விச்சான்று கொடுத்து பணியில் சேர்ந்ததாக விசாரணை நடந்து வரும் நிலையில், தொடர்புடைய ஒருவர் பணி ஓய்வு பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
மீனாட்சி அம்மன் கோவிலில் சில ஆண்டுகளுக்கு முன் சேவுகர் உள்ளிட்ட பணிகளுக்கு பணி நியமனம் நடந்தது. சேவுகர் ஒருவரின் கல்விச்சான்று குறித்து சந்தேகம் எழ, விசாரணையில் அவரது 10ம் வகுப்பு கல்விச்சான்று போலி என, தெரிந்தது.
இதேபோல, 36 பேரின் கல்விச்சான்றுகளில் குளறுபடி இருப்பது தெரிந்தது. அதிலும், 29 பேரின் கல்விச்சான்றுகளின் உண்மைத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும், தொடர்ந்து பணிபுரிகின்றனர்.
இதுகுறித்து, நம் நாளிதழ் சுட்டிக்காட்டியதை தொடர்ந்து, அறங்காவலர் குழு விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டோருக்கு நோட்டீஸ் கொடுத்தது. விசாரணை நடந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட ஒருவர் பணி ஓய்வு பெற்றார். ஆளுங்கட்சி அழுத்தத்தால் பணி ஓய்வு பெற கோவில் நிர்வாகம் அனுமதித்ததாக, ஹிந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
துறை விசாரணை நடக்கும்போது சம்பந்தப்பட்டோரை ஓய்வு பெற அனுமதிக்காமல், பணி ஓய்வு நாளன்று 'சஸ்பெண்ட்' செய்வர். ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம், பணி ஓய்வுக்கு அனுமதித்தது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.