UPDATED : அக் 25, 2026 08:08 PM
ADDED : அக் 25, 2026 08:06 PM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: நகரி கல்வி இன்டர்கான்டினென்டல் பள்ளியை உள்ளடக்கிய கல்வி குழுமம், ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலையுடன் கல்விசார் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
அக்.23ல் நடந்த நிகழ்வில் கல்வி தரத்தை மேம்படுத்தல், சர்வதேச கல்விச் சூழலை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்துதல், ஆசிரியர்களின் தொழில்முறை திறன்களை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிவுப்பகிர்வு, கல்விசார் அனுபவ பரிமாற்றம் போன்ற துறைகளில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
