தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/காப்பீடு எதிர்பார்க்கும் நுாற்பாலை ஊழியர்கள்: பொதுக்குழுவில் தீர்மானம்

காப்பீடு எதிர்பார்க்கும் நுாற்பாலை ஊழியர்கள்: பொதுக்குழுவில் தீர்மானம்

காப்பீடு எதிர்பார்க்கும் நுாற்பாலை ஊழியர்கள்: பொதுக்குழுவில் தீர்மானம்


UPDATED : அக் 11, 2026 04:57 PM

ADDED : அக் 11, 2026 04:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 04:57 PM ADDED : அக் 11, 2026 04:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: ‘‘குடும்பத்தினரும் பயன்பெறும் வகையில் விபத்து, மருத்துவ காப்பீட்டை ஆலை நிர்வாகம் வழங்க வேண்டும்’’ என, கூட்டுறவு அலுவலர், அமைச்சுப் பணியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரையில் தமிழ்நாடு கூட்டுறவு நுாற்பாலை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் கவுரவ தலைவர் பக்தவச்சலு தலைமையில் நடந்தது. சட்ட ஆலோசகர் விஜயசாரதி முன்னிலை வகித்தார்.

தமிழக கூட்டுறவு நுாற்பாலைகளில் பணிபுரியும் நிர்வாக, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும். இத்துறையின் நிர்வாக பணியாளர்கள், ஷிப்ட் மேற்பார்வையாளர்களுக்கு காலியியிடங்களை டி.என்.பி.எஸ்.சி., மூலம் உடனே நிரப்ப வேண்டும்.

கூட்டுறவு நுாற்பாலை ஊழியர்களுக்கு அதிகபட்ச பணிக்கொடை ரூ.25 லட்சத்தை முன்தேதியிட்டு வழங்க வேண்டும். மருத்துவ விடுப்பு, பண்டிகை முன்பணம் ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போல், கூட்டுறவு நுாற்பாலை ஊழியர்களின் குடும்பத்தினர் பயன்பெறும் வகையில் விபத்து, மருத்துவ காப்பீடை, ஆலை நிர்வாகம் சார்பில் வழங்க வேண்டும்.

துணி நுால் ஆணையரகத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணியிடத்திற்கு ஆலையில் இருந்து தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்கும் பழைய முறையை கடைபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுக்குழுவில் கவுரவ தலைவராக பக்தவச்சலு, தலைவராக முருகேசன், துணைத்தலைவராக முருகன், செயலாளராக மதிஸ்குமார், பொருளாளர்களாக மகேந்திரன், சிவதாணு, உதவி சட்ட ஆலோசகராக முத்துமாரியப்பன் உள்பட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். ராஜா, சையது, மகேந்திர மல்லு, தினேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us