/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
சாத்தையாறு அணை துார்வாரப்படும் அமைச்சர் மூர்த்தி தகவல்
/
சாத்தையாறு அணை துார்வாரப்படும் அமைச்சர் மூர்த்தி தகவல்
சாத்தையாறு அணை துார்வாரப்படும் அமைச்சர் மூர்த்தி தகவல்
சாத்தையாறு அணை துார்வாரப்படும் அமைச்சர் மூர்த்தி தகவல்
ADDED : அக் 29, 2024 05:28 AM
பாலமேடு: பாலமேடு சாத்தையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் நேற்று முன்தினம் அணை மறுகால் பாய்ந்தது.
நேற்று காலை அமைச்சர் மூர்த்தி, அணை மூலம் பாசன வசதி பெறும் கண்மாய்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன்,செயற்பொறியாளர் பாரதிதாசன், உதவிச் செயற்பொறியாளர் சையது ஹபீப், உதவி பொறியாளர் பிரபாகரன், தி.மு.க., ஒன்றிய செயலாளர் தன்ராஜ், அவைத் தலைவர் பாலசுப்ரமணியன், பேரூராட்சி தலைவர்கள் பால்பாண்டியன், ஜெயராமன், பாசன விவசாய சங்கத்தினர் பங்கேற்றனர்.
அமைச்சர் கூறியதாவது:
இந்த அணைக்கு பாத்தியப்பட்டதாக 10 கண்மாய்கள் உள்ளன. நேரடியாகவும், கண்மாய்கள் மூலமும் 2000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. வடகிழக்கு பருவமழையை கருத்தில் கொண்டு தற்போது 18 நாளைக்கு கண்மாய்களுக்கு தண்ணீர் விடுவதற்காக திறக்கப்பட்டுள்ளது.
பழுதான ஷட்டரைபுதியதாக மாற்றி அமைத்துள்ளோம். இந்த ஆண்டு விவசாயம் முடிந்ததும் அணையை துார்வார அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

