/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
மாணவியரின் படிப்பு நிதி அளித்த அமைச்சர்
/
மாணவியரின் படிப்பு நிதி அளித்த அமைச்சர்
ADDED : ஆக 23, 2025 03:56 AM
மதுரை : மேலுார் அரசு கலைக்கல்லுாரியில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தில் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்தார். இதில் வல்லாளப்பட்டி கார்த்திகா பங்கேற்றார். கடந்தாண்டு பிளஸ் 2 தேர்வில் 75 சதவீத மதிப்பெண் பெற்ற அவர் குடும்ப வறுமையால் உயர்கல்விக்கு செல்லவில்லை.
தந்தை பிரசாத் இறந்துவிட்டதால் தாய் ஆசைப்பொண்ணு, தங்கைகள் இருவர், தம்பி ஒருவருடன் வசிக்கிறார். கார்த்திகாவிடம் அமைச்சர் மூர்த்தி, படிப்பை நிறுத்தியது குறித்து கேட்டார். மாணவியின் வறுமையை அறிந்து சொந்த நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் வழங்கினார். மேலும் அவரது தாய் ஆசைப்பொண்ணுக்கு தாலுகா அலுவலகத்தில் தற்காலிக வேலை வழங்க பரிந்துரைத்தார்.
இதேபோல தும்பைப்பட்டியை சேர்ந்த அதிகமதிப்பெண் பெற்ற மாணவி பிரியதர்ஷினியும் உயர்கல்வி செல்லாததை அறிந்து ரூ. ஒரு லட்சம் வழங்கினார். கலெக்டர் பிரவீன்குமார், சி.இ.ஓ., ரேணுகா, ஆர்.டி.ஓ., சங்கீதா பங்கேற்றனர்.