/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஜல்லிக்கட்டு மைதான திறப்பு விழா அன்றும் ஜல்லிக்கட்டு நடக்கும் அமைச்சர் வேலு தகவல்

ADDED : ஜன 10, 2024 06:35 AM
அலங்காநல்லுார் : 'அலங்காநல்லுார் அருகே கீழக்கரையில் ஜல்லிக்கட்டு மைதானம் திறப்பு விழா அன்று ஜல்லிக்கட்டு நடத்தப்படும்' என அமைச்சர் வேலு தெரிவித்தார்.
இங்கு ரூ.44 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மைதானத்தை அமைச்சர்கள் வேலு, மூர்த்தி ஆய்வு செய்தனர். கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
அமைச்சர் வேலு கூறியதாவது: முதல்வர் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றுஉள்ளன. இம்மாத இறுதியில் முதல்வர் திறந்து வைக்கிறார். திறப்பு விழா அன்று மிகப் பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். அவனியாபுரம், அலங்காநல்லுார், பாலமேடு ஜல்லிக்கட்டுக்கு அடுத்தபடியாக 4வது ஜல்லிக்கட்டு போட்டியாக நீதிமன்ற தீர்ப்புக்குட்பட்டு உலக தரத்தில் இங்கு போட்டிகள் நடைபெறும்.
ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலேயே ஜல்லிக்கட்டுக்கு தனி மைதானம் கட்டப்பட்டுள்ளது. நமது தமிழ்நாட்டில் தான் கால்நடை மருந்தகம், காத்திருக்கும் கூடம், சுகாதார நிலையம், வாடிவாசல் அலுவலகம், தற்காலிக விற்பனை கூட பொருட்கள் பாதுகாப்பு அறை, மழை நீர் வடிகால் என அனைத்து வசதிகளும் இங்குள்ளன. தென்னக மக்கள் பாராட்டும் வகையில் மைதானம் திறப்பு விழா நடைபெறும் என்றார்.