/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குடிநீர் திட்டப் பணி அமைச்சர்கள் ஆய்வு
/
குடிநீர் திட்டப் பணி அமைச்சர்கள் ஆய்வு
ADDED : டிச 06, 2025 05:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை,
மதுரையில் முல்லை பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளை அமைச்சர்கள் நேரு, மூர்த்தி ஆய்வு செய்தனர்.
மாநகராட்சி மக்களுக்கு 24 மணிநேரமும் குடிநீர் வினியோகிக்க ரூ. 2070.69 கோடி மதிப்பிலான இத்திட்டத்தை நாளை (டிச.,7) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, நேற்று மாலை அமைச்சர்கள் நேரு, மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். அவர்களிடம், திட்ட விபரங்கள் தொடர்பாக மாநகராட்சி கமிஷனர் சித்ரா விளக்கினார். தலைமைப் பொறியாளர் பாபு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.

