/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அமைக்கப்படும் 'அதிசய ரோடு'
/
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அமைக்கப்படும் 'அதிசய ரோடு'
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அமைக்கப்படும் 'அதிசய ரோடு'
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அமைக்கப்படும் 'அதிசய ரோடு'
ADDED : பிப் 04, 2024 03:13 AM
மதுரை : மதுரை பாலம் ஸ்டேஷன் ரோடு முதல் குலமங்கலம் மெயின் ரோடு ரோடு அமைக்கும் பணியில், பாதியிடங்களில் தனி நபர் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே ரோடு அமைக்கும் பணி நடக்கிறது.
இப்பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ரோடு அமைக்கப்படாமல் பொதுமக்கள் திணறி வந்தனர். தற்போது குலமங்கலம் மெயின் ரோடு வரை அகலமான தார் ரோடு அமைக்கப்பட்டுள்ளது. 50 அடி ரோடு முதல் மணவாளநகர் மெயின் ரோடு சந்திப்பு வரை ரோட்டின் அகலம் பாதியாக சுருங்கி விட்டது.
குலமங்கலம் ரோடு இடது பக்கம் ரோட்டில் இருந்து 20 அடி வரை தனி நபர்கள் ஆக்கிரமித்து செட், தகர கொட்டகை அமைத்துள்ளனர். சில இடங்களில் அரசு மின் கம்பங்களையும் சேர்த்தே ஆக்கிரமித்துள்ளனர். குறிப்பாக குலமங்கலம் 50 அடி ரோடு முதல் 60 அடி ரோடு இடைப்பட்ட சந்திப்பில் கடைகளாகவும் வீடுகளாகவும் ஆக்கிரமிப்பு உள்ளது. இந்த இடத்தில் மட்டும் ஆக்கிரமிப்புகளை அகற்றாமலே ரோடு அமைக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அவர்கள் கூறியதாவது: நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, மாநகராட்சி அனுமதி உடன் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமலே ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. கண்மாய் கரையை இஷ்டம் போல் வளைத்து கடைகள் ஆக்கிரமித்து உள்ளதால் ரோடு முழுமையாக நிறைவேறப்படாமல் உள்ளது. இதனால் குலமங்கலம் மெயின் ரோடு அகலமாகவும் மணவாள நகர் மெயின் ரோடு சந்திப்பு, 50 அடி ரோடு 60 அடி ரோடு இடைப்பட்ட பகுதி மிகவும் குறுகலாகவும் அமைவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகும் வாய்ப்பு உள்ளது என்றனர்.