ADDED : நவ 28, 2025 07:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி சந்தை திடலுக்குள் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரை இடம்மாற்ற எம்.எல்.ஏ., அய்யப்பன் கோரிக்கை விடுத்தார். அப்பணிக்கு குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும் என மின்வாரியம் தெரிவித்தது. அதனை பொதுப்பணித்துறையினர் செலுத்த ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்பின்னும் தாமதமானதால் மின்வாரியத்தினர் மறுப்பதாக கூறி, மின்வாரிய அலுவலகம் முன்பு அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக்குழுவினருடன் உண்ணாவிரதம் இருந்தார். அவரிடம் மின் செயற்பொறியாளர் (பொறுப்பு) முத்தரசன், ''கலெக்டரின் பார்வைக்கு கொண்டு சென்று பொதுப்பணித்துறை பணம் செலுத்த ஏற்பாடு செய்துள்ளோம்'' என்றார். மாலை வரை உண்ணாவிரதம் நீடித்தது.

