நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம்: திருமங்கலம் காட்டு பத்திரகாளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு எம்.எல்.ஏ., அய்யப்பன் அன்னதானம் வழங்கினார்.
அவர் பேசியதாவது: மதுரையில் செப்.,4ல் அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநாடு நடக்கிறது. இதன் மூலம் தெளிவான முடிவு எட்டப்படும். பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க.,வினர் ஒன்றிணைவர்.
பழனிசாமி, பன்னீர் செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோர் ஒன்றிணைவதன் மூலம் தி.மு.க., ஆட்சியை அகற்ற முடியும் என்றார். நிர்வாகிகள் ராஜாமணி, ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.