நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர் : திருநகர், பாலசுப்பிரமணியன் நகர் பகுதி வீடுகளில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது.
கூட்டமாக வீட்டின் சுற்றுச்சுவர் மேல் செல்கின்றன. சிலரது வீட்டிற்குள் புகுந்து உணவுப்பொருட்களை எடுத்துச் செல்கின்றன. வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைக்க முடியவில்லை. குரங்குகள் அட்டகாசம் அதிகளவில் உள்ளது. குரங்குகளை பிடித்து காட்டுப்பகுதியில் விட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.