/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கலெக்டர் அலுவலகத்தில் காணாமல் போகும் சேர்கள் 15க்கும் மேற்பட்டவை மாயம்

ADDED : செப் 23, 2024 04:27 AM
மதுரை : மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் 'மடக்கி எடுத்துச் செல்லும்' வகையிலான வீல்சேர்கள் அடிக்கடி காணாமல் போவதாக புகார் எழுந்துள்ளது.
கலெக்டர் அலுவலகத்திற்கு மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் தினமும் வந்து செல்கின்றனர். குறிப்பாக குறைதீர் நாள் கூட்டம் நடக்கும் திங்கட்கிழமைகளில் அதிகம் வருவர். இவர்கள் பயன்பாட்டுக்காக இங்கு வீல்சேர்கள், மடக்கி கையில் எடுத்துச் செல்லும் வகையிலான வீல்சேர்களும் உள்ளன.
இவை அடிக்கடி காணாமல் போவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அலுவலக வராண்டாவில் உள்ள அவற்றை முதியோர், மாற்றுத்திறனாளிகளே அதிகம் பயன் படுத்துகின்றனர்.தேவைப்படும் சிலர் வந்து கேட்கும்போதுதான் சில வீல்சேர்கள் காணாமல் போவது தெரியவந்துள்ளது.
அவற்றை கலெக்டர் அலுவலகம் வருவோரில் யாரோ சிலர் வீல்சேர்களை மடக்கி ஆட்டோவில் எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.
இதனால் யாரும் அறிய முடியாமல் போகிறது. இவ்வகையில் 15க்கும் மேற்பட்ட வீல்சேர்கள் காணாமல் போயிருக்கலாம் என மறுவாழ்வுத் துறையினரிடம் மாற்றுத் திறனாளிகள் புலம்புகின்றனர். இதை தவிர்க்க மறுவாழ்வுத்துறையினர் இனி எளிதாக எடுத்துச் செல்ல முடியாத வகையிலான சேர்களுக்கு ஏற்பாடு செய்து வருகின்றனர்.