திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல்வர் ராம சுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், இயக்குனர் பிரபு முன்னிலை வகித்தனர்.
மாணவி கனக பூஜா வரவேற்றார். மன்ற ஒருங்கிணைப்பாளர் ஹரி விஷ்ணு, புகைப்படக் கலைஞர் ஆர்த்தி பேசினர். சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை, ஓவியம், வினாடி வினா, அலைபேசியில் போட்டோ எடுத்தல், கழிவுகளிலிருந்து கலைநயம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 17 துறைகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். செயற்கை நுண்ணறிவுத் துறை மாணவர்கள் அதிக புள்ளிகள் பெற்று சுழற்கோப்பையை வென்றனர். நுண்ணுயிரியல் துணைத் தலைவர் கோபி மணிவண்ணன், பேராசிரியர் சிலம்பரசன் ஒருங்கிணைத்தனர். மாணவி அர்ச்சனாதேவி நன்றி கூறினார்.