ADDED : ஜூன் 14, 2025 05:26 AM
திருப்பரங்குன்றம்: மதுரையில் ஜூன் 22ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து. மதுரை மேற்கு பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பரங்குன்றத்தில் நடந்தது.
மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை வகித்தார். பார்வையாளர் ராஜரத்தினம், பொதுச் செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள், முருக பக்தர்கள் மாநாட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் சசிராமன், முன்னாள் மாவட்ட தலைவர் சசிகுமார் ஆலோசனை வழங்கினர்.
மாவட்ட பொருளாளர் ராக்கப்பன், மாநில செயற்குழு உறுப்பினர் வெற்றிவேல் முருகன், மண்டல நிர்வாகிகள் கபிலன், முருகன், செந்தில்குமார், கோதண்டராமன் பங்கேற்றனர்.
மாநாட்டில் மாவட்டம் முழுவதும் இருந்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பது, அதற்காக மூவாயிரம் வாகனங்களை ஏற்பாடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது.
மண்டல தலைவர் வேல்முருகன் நன்றி கூறினார்.