/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை கூட்டம்
/
முருக பக்தர்கள் மாநாடு ஆலோசனை கூட்டம்
ADDED : ஜூன் 04, 2025 01:33 AM
மேலூர்: மதுரையில் ஜூன் 22-ல் நடக்கும் முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம் மேலூரில் பா.ஜ., கிழக்கு மாவட்ட தலைவர் ராஜசிம்மன் தலைமையில் நடந்தது.
தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் பங்கேற்றனர்.
நயினார் நாகேந்திரன் பேசுகையில், ''தமிழக சட்ட ஒழுங்கு மற்றும் போலீஸ் துறை முதல்வரின் அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது. மொழியை வைத்து அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே அரசியல் கட்சியினருக்கு உள்ளதே தவிர நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இல்லை. மத்திய அரசிடம் இணைந்து திட்டங்களையும் உதவிகளையும் பெறுவதற்கு தி.மு.க., அரசு தயங்குகிறது. முருக பக்தர்கள் மாநாடு வெற்றி பெற்றால் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்,'' என்றார்.
பா.ஜ., தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, நிர்வாகிகள் ராமசேகர், கதலி நரசிங்க பெருமாள், மாரி சக்கரவர்த்தி, சிவலிங்கம், பாண்டித்துரை, கண்ணன், இளமுருகன், சேவுகமூர்த்தி, தர்மலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.