/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு 250வது நாள் உணவு தானம்
/
நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு 250வது நாள் உணவு தானம்
நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு 250வது நாள் உணவு தானம்
நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பு 250வது நாள் உணவு தானம்
ADDED : நவ 14, 2024 06:53 AM

மதுரை ; மதுரை அரசு மருத்துவமனையில் நட்சத்திரம் நண்பர்கள் அமைப்பின் நிறுவனர் குரு தலைமையில் நேற்று 250 வது நாள் உணவு தானம் நடந்தது.
2000 பேருக்கு உணவு, குடிநீர், பழங்கள் வழங்கும் நிகழ்வை மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., ஜஸ்டின் பிரபாகரன் துவக்கி வைத்தார். சட்ட ஆலோசகர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிறுவனர் குரு கூறியதாவது: எங்கள் அமைப்பின் சார்பில் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுடன் தங்கும் காப்பாளர்கள் இரண்டரை லட்சம் பேருக்கு உணவு வழங்கியுள்ளோம். பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை, சீருடை, மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள், பெண்களுக்கு தையல் மிஷின்கள் வழங்கியுள்ளோம்.
சாலையோர ஆதரவற்றவர்களை மீட்டு உறவினர்களிடம் சேர்த்து வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். வைகையாற்றில் ஆகாயத்தாமரை அகற்றி இரு கரைகளிலும் 200 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி கழிவுகளை கொட்டுவதை தடுக்க வழி செய்துள்ளோம் என்றார்.

