ADDED : டிச 19, 2025 06:08 AM
மதுரை: மதுரை எஸ்.ஆர்.எம்., பொறியியல் கல்லுாரியில் கணினி அறிவியல், பொறியியல் துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு குறித்த இருநாள் தேசிய தொழில்நுட்ப மாநாடு நேற்று துவங்கியது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் நிதியுதவியுடன் 'செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல்' குறித்த தமிழ் வழி தொழில்நுட்ப மாநாடு ௨ நாட்கள் நடக்கிறது.
எஸ்.ஆர்.எம்., குழுமத் தலைவர் ரவி பச்சமுத்து, எஸ்.ஆர்.எம்.சி.இ.டி., யின் தலைவி பத்மபிரியா, தாளாளர் ஹரிணி, கல்வி, நிர்வாக இயக்குநர் வெங்கடேஷ் பாபு வழிகாட்டுதலில் இம்மாநாடு நடக்கிறது.
முதல்வர் துரைராஜ் தலைமையில் துணை முதல்வர் சம்பத், ஒருங்கிணைப்பாளர் மனோகரன் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
பல்வேறு நிறுவனங்களில் இருந்து தொழில்நுட்ப வல்லுநர்கள் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

