ADDED : ஆக 13, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமையில் உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் தேசிய நுகர்வோர் தினம், உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா நடந்தது.
இதையொட்டி பள்ளி், கல்லுாரி மாணவர்களுக்கு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் 104 பேருக்கு பரிசு, சான்றுகளை கலெக்டர் வழங்கினார். டி.ஆர்.ஓ., அன்பழகன், டி.எஸ்.ஓ., ராஜகுரு, நுகர்வோர் விழிப்புணர்வு பொதுநல மைய தலைவர் ஜெயபாலன், மனிதநேய நுகர்வோர் பாதுகாப்பு ஆர்கனைசேஷன் தலைவர் அசோகன், கூடல்நகர் நுகர்வோர் இயக்க துணைத்தலைவர் ராமமூர்த்தி மற்றும் நுகர்வோர் அமைப்பு நிர்வாகிகள் ராஜசேகர், வேல்மணிராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
