ADDED : அக் 22, 2024 05:22 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: கோவாவில் நடந்த தேசிய டிபன்டோ (ஐரோப்பிய தற்காப்பு கலை) போட்டியில் தமிழக அணி சார்பில் மதுரை குங்பூ டெம்பிள் அகாடமி வீரர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை வி.எம்.ஜெ., பள்ளி மாணவர் ஸ்ரீநிக் ஷ் வேல், கே.எல்.என். வித்யாலயா பள்ளி விஷ்வ பாலாஜி, வல்லபா வித்யாலயா பள்ளி நித்தின் பொன்தேவ், கே.என்.எம்.ஜி., மெட்ரிக் பள்ளி சூரியகுமரன் ஆகியோர் தலா ஒரு வெள்ளிப் பதக்கம் வென்றனர்.
வெற்றி பெற்றவர்கள் வரும் பிப்ரவரியில் ஜப்பானில் நடக்கவுள்ள ஆசிய டிபன்ட்டோ போட்டிக்கு தேர்வாகினர். வீரர்களை கிராண்ட் மாஸ்டர் சரவணன் பாராட்டினார்.

