/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
'தேசிய தலைவர்' பட காட்சிகள் நீதிபதி குழு முடிவெடுக்க வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

ADDED : அக் 26, 2025 04:47 AM
மதுரை: ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து 'தேசிய தலைவர்' படத்தை பார்வையிட்டு சர்ச்சைக்குரிய காட்சிகள் இல்லையென உறுதிசெய்த பின் வெளியிட அனுமதிக்க தாக்கலான வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.
மதுரை வழக்கறிஞர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு 'தேசிய தலைவர்' படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இமானுவேல் சேகரனை விமர்சிக்கும் வகையில் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இப்படம் ஒருதலைபட்சமாக உருவாக்கப்பட்டிருந்தால் தென் மாவட்டங்களில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்படும் அபாயம் உள்ளது.
பிரச்னையை துாண்டும் வகையில் சமூக வலை்தளங்களில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது.
படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து படத்தை பார்வையிட வேண்டும். சமூக அவமதிப்பு அல்லது சட்டம்- ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடிய காட்சிகள் இல்லையென உறுதிசெய்த பின் படத்தை திரையிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு தமிழக உள்துறை, சட்டத்துறை செயலர்கள், டி.ஜி.பி., மத்திய திரைப்பட சான்றிதழ் வாரிய மண்டல அலுவலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு அக்.,28 க்கு ஒத்திவைத்தனர்.