ADDED : ஜூன் 14, 2025 05:33 AM
மதுரை: மதுரை டென்னிஸ் பவுண்டேஷன் சார்பில் அகில இந்திய டென்னிஸ் ஜூனியர் ரேங்கிங் (அய்ட்டா) ஆடவர், மகளிர் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் மதுரைக் கல்லுாரியில் நடந்தது.
ஆடவர் போட்டி முடிவுகள்
ஒற்றையர் முதல் அரையிறுதி போட்டியில் ஜீவித் 6 - 4, 6 - 0 செட்களில் நரேஷ் பாபுவை வீழ்த்தினார். அடுத்த அரையிறுதியில் இஷான் சுதர்சன் 6 - 4, 6 - 0 செட்களில் ரித்திக் ஜெயந்தை வீழத்தினார். இறுதிப்போட்டியில் இஷான் 5 -- 7, 6 -- 2, 6 - 1 செட்களில் ஜீவித்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இரட்டையர் இறுதிப் போட்டியில் சம்பத், ரித்திக் ஜெயந்த் ஜோடி 6 - 4, 2 - 6, 10 - 5 செட்களில் ஜீவித், இஷான் ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
மகளிர் போட்டி முடிவுகள்
ஒற்றையர் முதல் அரையிறுதி போட்டியில் தனுஸ்ரீ 6 - 3, 3 - 6, 7 - 5 செட்களில் தியா ரவிக்குமாரை வீழ்த்தினார். அடுத்த அரையிறுதியில் நல்யாழினி 6 - 3, 6 - 4 செட்களில் வீணாவை வீழ்த்தினார். இறுதிப் போட்டியில் தனுஸ்ரீ 6 - 1, 6 - 2 செட்களில் நல்யாழினியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் இரட்டையர் இறுதிப் போட்டியில் தனுஸ்ரீ, ஹீரா ஜோடி 6 - 4, 5 - 7, 10 - 5 செட்களில் நல்யாழினி, தியா ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றனர்.
பரிசளிப்பு விழாவில் அய்ட்டா சி.இ.ஓ., ஹிடன் ஜோஷி, விளையாட்டு இயக்குநர் மோகன், கரூர் டென்னிஸ் சங்க செயலாளர் செந்தில்குமார், கரூர் ஆர்.டி.ஓ., முகமது பைசல், தமிழ்நாடு டென்னிஸ் சங்க உதவிப் பொது மேலாளர் மார்ட்டின் கலந்து கொண்டனர்.